close
Choose your channels

டி20 போட்டியில் முதல் இரட்டை சதம்.. பேய் அடி பேட்டிங்கால் அலறவிட்ட இளம் வீரர்!

Monday, July 5, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டியில் டெல்லி லெவன் அணியைச் சேர்ந்த இளம் வீரர் சுபோத் பாட்டி இரட்டை சதம் அடித்து உலகச் சாதனை படைத்து இருக்கிறார். இவர் 79 பந்துகளுக்கு 205 ரன்களை விளாசி இருக்கிறார். இதில் 17 பவுண்டரி, 17 சிக்ஸர் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சுபோத் பாட்டியை தற்போது ஐபிஎல் அணிகள் மொய்க்கத் துவங்கி இருப்பதும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் இடையே கிளப் கிரிக்கெட் டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை குவித்து உள்ளது. இந்த ரன்களில் 80% அதாவது 205 ரன்களை ஒரே வீரர் அடித்து இருக்கிறார். அவர்தான் இளம் வீரர் சுபோத் பாட்டி. அவர் அடித்த ரன்களில் 17 பவுண்டரி மற்றும் 17 சிக்ஸர் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் “காட்டடி ராஜா“ என்ற பட்டப்பெயரும் இவருக்கு கிடைத்து இருக்கிறது.

உலக முன்னணி வீரர்கள் செய்யாத சாதனையை இளம் விரர் சுபோத் பாட்டி செய்து இருக்கிறார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் “யுனிவர்சல் பாஸ்“ என அழைக்கப்படும் கிறிஸ் கெயில் இதற்கு முன்பு 66 பந்துகளுக்கு 175 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்த படியாக ஆஸ்திரேலிய வீரர் ஃபின்ச் 76 பந்துகளுக்கு 172 ரன்களை குவித்தார். இவர்களைத் தவிர மசகட்சா 71 பந்துகளுக்கு 162 எடுத்துள்ளார்.

இப்படி சர்வதேச வீரர்கள் செய்ய முடியாத சாதனையை தற்போது உள்ளூர் கிரிக்கெட் விளையாடி வரும் இளம் வீரர் செய்து இருக்கிறார். இதனால் ஐபிஎல் அணிகள் இவரை மொய்க்கத் துவங்கி இருக்கின்றன.

சுபோத் பாட்டி அடிப்படையில் ஒரு பவுலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் வேகப்பந்து வீச்சாளரான இவர் வலது கை ஆதிக்கம் கொண்ட ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். பேட்டிங்கிலும் அதிக ஆர்வம் இருப்பதால் தற்போது 79 ரன்களுக்கு 205 ரன்களைக் குவித்து பலரையும் தன்மீது கவனம் பெற செய்திருக்கிறார். இதனால் வரும் 2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே இவரை ஐபிஎல் போட்டியில் சேர்த்துக் கொள்ள தற்போது ராஜஸ்தான் போன்ற சில அணிகள் ஆலோசனை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.