close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் இணைந்த பிரபல குணசித்திர நடிகர்

Tuesday, January 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் எட்டு நாடுகளில் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால் நடித்து வரும் நிலையில் சித்தார்த், அபிஷேக்பச்சன் உள்பட ஒருசில நடிகர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இணைந்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி கணேஷ் கூறியபோது, 'இந்தியன் 2' படத்தில் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அருமையான அமைதியான இயக்குனர் திரு சங்கர் மற்றும் உலக நாயகன் கமல் இவர்களுடன் நல்ல காம்பினேஷன்' என்று கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.