தவறான முடி திருத்தம்… நீதிமன்றத்தை நாடிய பெண்ணுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு!
- IndiaGlitz, [Saturday,September 25 2021]
மாடலாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த பெண்ணிற்கு பிரபலமான அழகுநிலையம் ஒன்று அதிகளவில் முடியை வெட்டியதோடு சிகிச்சை என்ற பெயரில் முடி வளர்ச்சியையும் பாழாக்கியிருக்கிறது. இதனால் நீதிமன்றத்தை நாடிய அந்தப் பெண்ணிற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைத்தீர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டெல்லியில் இருக்கும் தி ஐபிசி எனும் பிரபலமான ஹோட்டலில் மவுரியா எனும் அழகுநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அழகுநிலையத்திற்கு இளம்பெண் ஒருவர் சென்றிருக்கிறார். எப்போதும் அந்தப் பெண்ணிற்கு முடித்திருத்தம் செய்யும் ஊழியர் அந்நேரத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் வேறொரு ஊழியர் அவருக்கு முடித்திருத்தம் செய்யப்போய் சிக்கல் முளைத்திருக்கிறது.
அதாவது முடியை 4 அங்குலம் வெட்டுமாறு இளம்பெண் கூறியதைக் கேட்ட ஊழியர் ஒட்டுமொத்த முடியே வெறும் 4 அங்குலம் இருக்கும் அளவிற்கு அந்த ஊழியர் வெட்டிவிட்டார். இதனால் அரண்டுபோன இளம்பெண் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து முடித்திருத்தத்திற்கு பணம் வாங்கிக்கொள்ளாமல் விட்ட அந்த நிர்வாகம் முடிவளர்வதற்கான சிகிச்சையை இலவசமாகச் செய்துகொள்ளவும் ஆஃபர் வழங்கி இருக்கிறது.
இந்நிலையில் இளம்பெண்ணிற்கு அழகுநிலையம் வழங்கிய சிகிச்சை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானதோடு அந்தப் பெண் செய்துகொண்டிருந்த மாடல் என்ற அந்தஸ்தும் கைநழுவி இருக்கிறது.