தவறான முடி திருத்தம்… நீதிமன்றத்தை நாடிய பெண்ணுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு!

  • IndiaGlitz, [Saturday,September 25 2021]

மாடலாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த பெண்ணிற்கு பிரபலமான அழகுநிலையம் ஒன்று அதிகளவில் முடியை வெட்டியதோடு சிகிச்சை என்ற பெயரில் முடி வளர்ச்சியையும் பாழாக்கியிருக்கிறது. இதனால் நீதிமன்றத்தை நாடிய அந்தப் பெண்ணிற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைத்தீர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லியில் இருக்கும் தி ஐபிசி எனும் பிரபலமான ஹோட்டலில் மவுரியா எனும் அழகுநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அழகுநிலையத்திற்கு இளம்பெண் ஒருவர் சென்றிருக்கிறார். எப்போதும் அந்தப் பெண்ணிற்கு முடித்திருத்தம் செய்யும் ஊழியர் அந்நேரத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் வேறொரு ஊழியர் அவருக்கு முடித்திருத்தம் செய்யப்போய் சிக்கல் முளைத்திருக்கிறது.

அதாவது முடியை 4 அங்குலம் வெட்டுமாறு இளம்பெண் கூறியதைக் கேட்ட ஊழியர் ஒட்டுமொத்த முடியே வெறும் 4 அங்குலம் இருக்கும் அளவிற்கு அந்த ஊழியர் வெட்டிவிட்டார். இதனால் அரண்டுபோன இளம்பெண் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து முடித்திருத்தத்திற்கு பணம் வாங்கிக்கொள்ளாமல் விட்ட அந்த நிர்வாகம் முடிவளர்வதற்கான சிகிச்சையை இலவசமாகச் செய்துகொள்ளவும் ஆஃபர் வழங்கி இருக்கிறது.

இந்நிலையில் இளம்பெண்ணிற்கு அழகுநிலையம் வழங்கிய சிகிச்சை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானதோடு அந்தப் பெண் செய்துகொண்டிருந்த மாடல் என்ற அந்தஸ்தும் கைநழுவி இருக்கிறது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் கவர்ச்சி நடிகை?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்: எஸ்பிபி முதலாம் ஆண்டு நினைவு தினம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணி அவர்கள் கடந்த ஆண்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கொரோனாவில்

தினமும் குளிப்பதில்லை? மனைவியிடம் விவாகரத்துக் கோரிய கணவன்!

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் ஒருவர், தனது மனைவி தினமும் குளிப்பதில்லை.

தப்பு செஞ்சா கை, கால்களை வெட்டுவோம்… புது அரசாங்கத்தால் மக்கள் கலக்கம்!

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் பழையபடி தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அடித்து ஆடிய RCB… அசால்ட்டா தட்டித்தூக்கிய சிஎஸ்கே அபார வெற்றி!

ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டிகளின் இரண்டாம் கட்ட போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது