தமிழகத்தில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு? அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் இதுவரை 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இதுவரை 2 உருமாறிய கொரோனா வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் பி.1.617.1 எனும் வைரஸ்க்கு “கப்பா” என்றும் பி.1.617.2 எனும் வைரஸ்க்கு “டெல்டா” என்றும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கு இந்த டெல்டா வகை வைரஸே காரணம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து உள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் இந்த வைரஸ்க்கான தடயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இரண்டாம் அலைக்கு காரணமான டெல்டா வகை வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டப்பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 1,159 நபர்களின் மாதிரிகள் பெங்களூரு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில் 554 மாதிரிகளுக்கான முடிவு தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 70% பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. வேகமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை மிகவும் ஆபத்தானது என உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் டெல்டாவில் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பும் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளது. டெல்டா (பி.1.617.2) வகை வைரஸ்களில் ஸ்பைக் புரதம் K417N பிறழ்வுகள் ஏற்பட்டு இதுவரை 8 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி!

கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றின் பாதிப்பாலும் உடல்நலக்குறைவு காரணமாகவும் காலமாகி வருவது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை

ஒரே நாளில் 10 மாடிக் கட்டிடம் ரெடி… அசர வைக்கும் மேக்கிங் வீடியோ!

“வீட்டைக் கட்டிப்பாரு கல்யாணத்தைப் பண்ணிப்பாரு“ எனச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நாம் இன்னும் பழைய தொழில் நுட்பத்திலேயே காலத்தை தள்ளி வருகிறோம்.

அடுத்த வாரம் திருமணம் செய்யப்போகும் ஷங்கரின் மகள் புகைப்படம் வைரல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்ததை பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த வாரம் பொள்ளாச்சியில் இந்த திருமணம்

'தளபதி 65' படத்தின் அட்டகாசமான டைட்டில்: ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 65' என்பதும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே

பெரிய ஆளா நீங்க? மூக்குல எல்லாம் புகை விட்றீங்க: 'மாஸ்டர்' பட நடிகரை கிண்டல் செய்த விஜய்!

'மாஸ்டர்' படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை படப்பிடிப்பின்போது தளபதி விஜய் கிண்டல் செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது