ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அரசியலுக்கு வரவிருப்பதை உறுதி செய்துள்ள நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ரஜினியின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அதிமுக வாக்குகள் நிலையானது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ’ரஜினி அரசியலுக்கு வருவதை தாங்கள் மனமார வரவேற்பதாகவும் அவரது அரசியல் வருகை நல்வரவாகட்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் வருங்காலத்தில் சூழ்நிலையை பொருத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினி கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

அர்ஜுன மூர்த்தியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்: பாஜக

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதும், தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தி ஆகிய இருவரையும்

ரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் தான் போட்டி: பாஜக பிரமுகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாகவும்,

வரிசையில் நிற்க மறுத்த அனிதா: 1 முதல் 13 வரை யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால்சென்டர் டாஸ்க் என்பது ஒவ்வொரு போட்டியாளரின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது போல், போட்டியாளர்களை ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது

பத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்!!! காரணம் தெரியுமா???

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகப் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை திருப்பி கொடுக்க உள்ளார்

25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி ஒருவர் தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை பிரதமர் மோடி