close
Choose your channels

உங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்: தமிழ் நடிகரை வாழ்த்திய் துணை முதல்வர் ஓபிஎஸ்!

Monday, November 23, 2020 • தமிழ் Comments
OPS
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உங்களுக்கு இந்த படத்தினால் பெரும் புகழ் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ் நடிகர் ஒருவரை வாழ்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘ஊமை விழிகள்’ படத்தை இயக்கிய அரவிந்த்ராஜ் இயக்கத்தில் ஜெ.எம்.பஷீர் என்பவர் நடித்து வரும் திரைப்படம் ’தேசிய தலைவர்’. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பசும்பொன் தேவர் கேரக்டரில் நடிக்கும் ஜெ.எம்.பஷீர் இஸ்லாமியராக இருந்தாலும் அவர் தற்போது முருகனுக்கு விரதமிருந்து பயபக்தியுடன் இந்த படத்தில் நடித்து வருகிறார். அதிமுகவில் சேர்ந்த இவர் சமீபத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுடன் கந்தகோட்டத்தில் நடந்த சூரசம்ஹாரத்தை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது ஜெ.எம்.பஷீரின் தோற்றத்தைப் பார்த்து உங்கள் முகத்தில் தேவரின் தோற்றம் தெரிகிறது உங்களுக்கு நிச்சயமாக இந்த படத்தால் பெரும் புகழ் கிடைக்கும் என்று வாழ்த்தியுள்ளார்.

முருகனின் அருள் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து ஆகியவை ஜெ.எம்.பஷீரை நெகழ்ச்சி அடையச் செய்து விட்டது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் போதும் பலர் உங்களைப் பார்க்கும்போது பசும்பொன் தேவர் ஐயாவை பார்த்தது போல் இருப்பதாக கூறிய நிலையில் தற்போது துணை முதல்வரிடம் இருந்தும் ஜெ.எம்.பஷீருக்கு வாழ்த்து கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.