பேஷன் உலகில் இதுசெம டிரெண்ட்… 60 வயதில் பேஷன் மாடலான தாய்!

  • IndiaGlitz, [Thursday,December 23 2021]

டிராவிஸ் டிமீர் எனும் பேஷன் டிசைனர் தனது பேஷன் பொருட்களுக்கு எந்த இளம் மாடலையும் விளம்பர மாடலாக பயன்படுத்த விரும்பாமல் தனது 60 வயது தாயையே மாடலாக மாற்றியிருக்கிறார். இது பேஷன் டிரெண்டில் புது வித்தியாசத்தை உணர வைத்திருக்கிறது.

விளம்பர மாடல்கள் அதுவும் பேஷன் மாடல்கள் என்றால் பதின்ம வயதில் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருந்து வருகிறது. இந்த எண்ணம் உண்மையில் சரிதானா? என்பதை மீண்டும் பரிசோதித்து பார்க்கும் வகையில் டிராவிஸ் டிமீர் என்பவர் தன்னுடைய IEMBE எனும் பிராண்டட் பொருளுக்கு தனது 60 வயது அம்மாவை விளம்பர மாடலாக நியமித்து இருக்கிறார்.

பேஷன் விஷயத்தில் எப்போதும் இளமையை மட்டுமே விரும்பும் நமது நெட்டிசன்கள் டிராவிஸ் மற்றும் அவரது அம்மாவின் கூட்டணி வீடியோவை பார்த்து தற்போது சோஷியல் மீடியாவில் மெய்சிலிர்த்து வருகின்றனர். மேலும் நியான் பச்சை நிறத்தில் உடையணிந்துள்ள டிராவிஸின் அம்மா ஒரு உண்மையான மாடலை மிஞ்சும் அளவிற்கு வளைந்து வளைந்து வந்து அழகான புன்னகை மற்றும் விளையாட்டுத் தனத்தால் தனது உடை அலங்காரத்தை வெளிப்படுத்துகிறார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் பேஷனுக்கு வயதான மனநிலை எதற்கு? என்பதுபோல இருக்கிறது இவர்களது புகைப்படம்.

More News

சிறுமிகளிடம் சில்மிஷம்… பிரபல கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டு சிறை!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும்

3 கோடி உதவித்தொகை பெற்ற விவசாயியின் மகள்… கிராமத்தில் இருந்து அரிய சாதனை!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் 3 கோடி அளவிற்கு உதவித்தொகை பெற்று அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகம்

சமந்தாவை அடுத்து ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடும் பிக்பாஸ் தமிழ் நடிகை!

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' திரைப்படத்தில் நடிகை சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடினார் என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது மட்டுமின்றி இந்த படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய

'வலிமை' படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது

அம்மாவை பார்த்ததும் துள்ளி குதித்து ஆனந்தக்கண்ணீர் விடும் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்கில் உறவினர்கள் வருகை தருகிறார்கள் என்பதும் போட்டியாளர்கள் மிகவும் சந்தோசத்துடன் உறவினர்களை கட்டிப்பிடித்து ஆனந்தமாக இருக்கும்