சீயான் விக்ரமுக்கு பாலா விதித்த நிபந்தனைகள்

  • IndiaGlitz, [Thursday,December 10 2015]

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நடித்த 'தாரை தப்பட்டை' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் பாலாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த புதிய படத்திற்காக 'தலையை மொட்டை அடிக்க வேண்டும், 20கிலோ எடையை குறைக்க வேண்டும், சிறு வேடங்களில் அல்லது கெளரவ வேடங்களில் வேறு படங்களில் நடிக்க கூடாது, சொந்தக்குரலில் டப்பிங் செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளை பாலா விதித்துள்ளதாகவும், ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் சேது', 'பிதாமகன்' ஆகிய படங்களில் நடித்துள்ள விக்ரம், இந்த நிபந்தனைகளை ஏற்று கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷங்கரின் 'ஐ' படத்திற்காக உடல் எடையை குறைத்த விக்ரம், பின்னர் '10 எண்றதுக்குள்ள' படத்திற்காக உடல் எடையை கூட்டினார். தற்போது மீண்டும் பாலா படத்திற்காக எடையை குறைக்கவுள்ளது அவருடைய அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜாக்கிசான் படத்தில் குங்பூ சண்டை போடும் தனுஷ் நாயகி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை அமைரா...

ஆஸ்திரேலியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு விருது

விஜய், ஷாலினி அஜித் நடித்த 'காதலுக்கு மரியாதை' படத்தில் ‘Love And Love Only' என்ற புத்தகம் இடம்பெறும் காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது...

தனுஷின் 'தங்கமகன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த வருடத்தில் தனுஷ் நடித்த 'அனேகன்' மற்றும் 'மாரி' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் 18ஆம் தேதி வெளியாகும்...

சென்னை நிவாரண நிதிக்காக 250ஐ 25ஆக மாற்றிய பிருத்விராஜ்

சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோலிவுட் நடிகர்கள் மட்டுமின்றி....

சென்னையில் சிகிச்சையை ஆரம்பித்த தனுஷின் மெடிக்கல் டீம்

சென்னையில் ஏற்பட்ட கனமழையின் பாதிப்பை அடுத்து கோலிவுட் திரையுலகினர் நிதியுதவி மட்டுமின்றி ஏராளமான...