ஒரே நாளில் இரண்டு பிரபுதேவா-தமன்னா படங்கள் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

பிரபுதேவா ,தமன்னா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' படத்தின் இரண்டாம் பாகமான 'தேவி 2' திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் 'பில்லா 2', 'உன்னை போல் ஒருவன்' போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவான 'காமோஷி' என்ற இந்தி திரைப்படமும் 'தேவி 2' திரைப்படம் வெளியாகும் அதே மே 31ஆம் தேதி வெளீயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் ஒரே நாளில் பிரபுதேவா, தமன்னா நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா, தமன்னா, பூமிகா உள்பட பலர் நடித்துள்ள 'காமோஷி' படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராஜேஷ்வர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.