close
Choose your channels

'என் பேட்டையில எவனும் விஸ்வாசமா இல்லை': சாருஹாசன்

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாலும் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாலும் இரண்டு படங்களும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாவதால் அதனை அடுத்து ஜனவரி 26ஆம் தேதிதான் மற்ற படங்கள் வெளியாகும் என்றும் அவற்றில் ஒன்று தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி வெளியீடு என்ற அறிவிப்புடன் இன்று வெளியாகியுள்ள 'தாதா 87' படத்தின் விளம்பர போஸ்டர் ஒன்றில், 'என் பேட்டயில எவனும் விஸ்வாசமா இல்லை, நீ மட்டும் ஏன்? என்ற வாசகம் உள்ளது.

சாருஹாசனுக்கு ஜோடியா நடிகை கீர்த்திசுரேஷின் பாட்டி சரோஜா நடிக்கும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஜனகராஜ் நடித்துள்ளார். விஜய்ஸ்ரீ இந்த படத்தை இயக்கியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.