சிம்புவுக்கு தனுஷ் வைத்த முக்கிய கோரிக்கை

  • IndiaGlitz, [Thursday,December 07 2017]

சிம்பு இசையமைப்பில் சந்தானம் நடிப்பில் உருவான 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். இந்த விழாவில் தனுஷ் பேசியதாவது:

நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்து இன்று அவருடைய உழைப்பால் கதாநாயகனாக அந்தஸ்து பெற்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய கடுமையான உழைப்பு பாடல்களில் தெரிகிறது.

சிம்பு மூன்று வயது முதல் நடித்து வருகிறார். 21 வயதிலேயே இயக்குனரானவர். இன்று அவரை இசையமைப்பாளராக பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் எனது வாழ்த்துக்கள்

சிம்புவும் நானும் 2012ஆம் ஆண்டு முதல் ஹீரோவாக நடித்து வருகிறோம். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது எளிது, வெற்றி கிடைப்பதும் எளிது. ஆனால் வாய்ப்பு, வெற்றிகளை தக்க வைத்துக்கொண்டு நிற்பதுதான் கடினம். கடந்த 15 வருஷமாக சிம்பு நிற்கிறார்

நாம் ஜெயிக்கும்போது நம்முடன் இருப்பவர்கள் உண்மையான நண்பர்கள் கிடையாது. நாம் கஷ்டத்தில் இருக்கும்போது நமக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, உடன் இருந்து ஆறுதல் கூறுபவர்கள் மட்டுமே உண்மையான நண்பர்கள். உண்மையான நண்பர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இருப்பார்கள்.

எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இதுவரை இருந்தது இல்லை. பிரச்சனை எங்கள் இருவருக்கும் நடுவில் இருப்பவர்களிடம் தான் உள்ளது. அவர்களை நான் குறை கூறவும் விரும்பவில்லை.

இந்த நேரத்தில் சிம்புவுக்கு ஒரு கோரிக்கையை அவருடைய ரசிகர்கள் சார்பில் வைக்கின்றேன். உங்கள் மீது மிகுந்த அன்பும், பாசமும் வைத்துள்ள உங்கள் ரசிகர்களுக்கு குறைந்தது வருடத்துக்கு இரண்டு படம் நீங்கள் கொடுங்கள், அது உங்கள் கடமை. உங்கள் ரசிகர்கள் சார்பில் எனது வேண்டுகோள் இது

நாம் ஒருவர் மீது வைக்கும் அன்பு, இன்னொருத்தர் மீது வெறுப்பாக மாறக்கூடாது. அப்படி மாறினால் அன்புக்கு அர்த்தமே கிடையாது. யாரும் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஒருத்தரை பிடிச்சிருந்தா கொண்டாடுங்கள், பிடிக்கவில்லையா ஒதுங்கி போயிருங்கள்

சிம்பு படத்தின் விழாவில் எனக்கு வரவேற்பு கொடுத்த சிம்பு ரசிகர்களுக்கு நன்றி, அதேபோல் என்னுடைய படத்தின் விழாவிற்கு சிம்பு வரும்போது என் ரசிகர்கள் இதே வரவேற்பை கொடுப்பார்கள்

இவ்வாறு நடிகர் தனுஷ் பேசினார்.

More News

பேருந்துகளில் இனி படங்கள், பாடல்கள் இல்லை: விஷாலுக்கு மேலும் ஒரு வெற்றி

திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை அனுமதி பெறாமல் பேருந்துகளில் ஒளிபரப்புவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வந்தன.

இயக்குனர் கவுதம்மேனன் கார் மீது லாரி மோதி விபத்து

மின்னலே திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், உள்பட முன்னனி நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன்

கமல்-ஸ்ரீப்ரியாவின் 'நீயா' பாணி படத்தில் ஜெய்

கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நீயா'. பாம்பு கதையான இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'நானே வருவேன்' என்ற படத்தை ஸ்ரீப்ரியா நடித்து இயக்கினார்

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் விஷால் சந்திப்பு!

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட நடிகர் விஷால் கொடுத்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு பின் மீண்டும் நிராகரிக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே

அதர்வாவின் அடுத்த படத்தில் ஜோடியாகும் ஹன்சிகா

நடிகர் அதர்வா 'செம போத ஆகாதே, 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது 'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்