'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்
விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய ’ராட்சசன்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்க இருக்கிறார் என்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’ராட்சசன்’ இயக்குனர் ராம்குமார் உடன் தனுஷ் இணையும் படம் குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தென்னிந்தியாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனுஷ் பிரபலம் என்பதால் தனுஷின் இந்த படத்தை பான்-இந்தியா படமாக உருவாக்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்
தனுஷ் தற்போது ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் ஹிந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை அடுத்து கார்த்திக் நரேன் படத்தில் நடிக்கும் தனுஷ் அதன்பின்னர் ’ராட்சசன்’ ராம்குமார் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது