close
Choose your channels

'தனுஷ் 35' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Monday, June 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு படங்களை தயாரித்து வருகிறது என்பதும் அவற்றில் ஒரு படம்தான் துரைசந்திரசேகர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பெயரிடப்படாத படம் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சினேகா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 'தனுஷ் 35' திரைப்படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராம்குமார் ஏற்கனவே 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' என்ற படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.