வீரனுக்கு தலைவனுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறிய தனுஷ்

  • IndiaGlitz, [Monday,June 04 2018]

நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்

இந்த விழாவில் தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது, 'வீரனுக்கும் தலைவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்பதுதான். இந்த கேள்விக்கு பதில் கூறிய தனுஷ், 'ஒருத்தன் 10 பேரை எதிர்த்தான் என்றால் அவன் வீரன். 10 பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தால் அவன் தலைவன். இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் நிலைமையைப் பார்க்கும் போது, நான் என்ன சொல்றேன்னு எல்லாருக்கும் புரியும்' என்று கூறினார்.

தனுஷின் இந்த விளக்கம் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் குறிப்பிடுவதாக சமூக வலைத்தள பயனாளிகள் கூறிவருகின்றனர்.