close
Choose your channels

தனுஷ்-சினேகா படத்தின் புதிய அப்டேட்!

Sunday, March 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை' படத்தில் இணைந்து நடித்த தனுஷ்-சினேகா ஜோடி மீண்டும் 13 வருடங்கள் கழித்து துரைசெந்தில்குமார் இயக்கும் படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் தனுஷ், அப்பா-மகன் என இரு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், அப்பா தனுஷூக்கு ஜோடியாகத்தான் சினேகா நடிக்கவுள்ளதாகவும், மகன் தனுஷூக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

துரைசெந்தில்குமார் இயக்கிய முந்தைய படமான 'கொடி' படத்திலும் தனுஷ், அண்ணன் - தம்பி என இரு வேடங்களில் நடித்திருந்தார் என்பதால் இந்த படம் 'கொடி 2' படமா? அல்லது புதிய கதையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தனுஷ் நடித்துள்ள 'அசுரன்' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.