தனுஷின் 'வடசென்னை' படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Wednesday,May 10 2017]

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் இந்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இந்த தகவலை இந்த படப்பிடிப்பில் தனுஷூடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் அமலாபால் நடிக்க வேண்டிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

More News

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடி ஆவாரா பிரபல பாலிவுட் நடிகை

இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷூக்கு மாதம் ஒரு படம் புக் ஆகி கொண்டிருக்கின்றது.

'தளபதி 61' படத்துடன் கனெக்சன் ஆன மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

கோலிவுட் திரையுலகில் இளையதளபதி விஜய் எந்த அளவுக்கு பெரிய நடிகரோ, அதற்கு சமமாக டோலிவுட்டில் மகேஷ்பாபு பெரிய நடிகர். மகேஷ்பாபு நடித்த சில படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்துள்ளார்

தனுஷின் 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ:

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று தனுஷ் அறிவிக்கவுள்ளார் என்று வெளிவந்த தகவலை இன்று காலை பார்த்தோம்...

அருள்நிதி-ராதாமோகனின் 'பிருந்தாவனம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கி முடித்துள்ள அடுத்த படம் 'பிருந்தாவனம்'. கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அருள்நிதி நடித்துள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழும் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

எஸ்பிபிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை! அமெரிக்காவில் பிரபல பாடகிக்கு துயரம்

சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது அவருடைய பாஸ்போர்ட், இசைக்குறிப்புகள் ஆகியவை ஒருசில முக்கிய பொருட்கள்ல் திருடப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட அதே நிலைமை அதே அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகிக்கும் தற்போது நேர்ந்துள்ளது