ஐஸ்வர்யாவை பிரிகிறேன்: தனுஷ் எடுத்த திடீர் விவாகரத்து முடிவு:

  • IndiaGlitz, [Monday,January 17 2022]

பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தனுஷ் திடீரென சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் 18 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக வாழ்ந்து வந்தோம் என்றும், எங்களது பயணத்தில் நல்ல வளர்ச்சி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை ஆகியவை இருந்ததாகவும் கூறியுள்ளார்

ஆனால் இன்று ஐஸ்வர்யாவும் நானும் தனித்தனியாக பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது தனிப்பட்ட முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளார். அவருடைய இந்த பதிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

பதவி விலகிய கோலிக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து விராட் கோலி பதவி விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து

இயக்குனர் சங்க தேர்தல் திடீர் ஒத்திவைப்பு: காரணம் இதுதான்!

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பொன்னியின் செல்வன்' ஓப்பனிங் பாடல் குறித்த மாஸ் தகவல்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில்

சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி: தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சியை ஒளிபரப்பிய பிரபல தமிழ் சேனலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஊரடங்கு தொடர்ந்த போதிலும் ரிலீஸில் உறுதியாக இருக்கும் விஷால் படம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு தொடர்ந்த போதிலும் விஷாலின் 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது