முதல் படம் ரிலீஸாகும் முன்பே அதே இயக்குனருடன் இன்னொரு படம்.. தனுஷின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,August 20 2023]

தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் முதல் முதலாக இணைந்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணைந்த முதல் படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் தற்போது ’டி50’ என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதனை அடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் ’டி51’ படத்தை சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கார்த்தியை அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதிஷங்கர்? எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் கார்த்தி நடித்த 'விருமன்' என்ற திரைப்படத்தில் நாயகி ஆக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமானார் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

பாஜக தலைவர்களை அடுத்து 'I.N.D.I.A' கூட்டணியின் முக்கிய தலைவரை சந்தித்த ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு சென்னை வரும் வழியில் பாஜக பிரமுகர்களை மட்டுமே சந்தித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் 'I.N.D.I.A' கூட்டணியின்

நடிகர் கவின் திருமணம்.. மணமகளுடன் இருக்கும் புகைப்படம் வைரல்..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான கவின் திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் அவரது திருமணம் நடந்தது

கிளாமர் உடையில் கண்களை மூடி ஒரு தியானம்.. நடிகை காயத்ரி சங்கர் லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகை காயத்ரி சங்கர் கிளாமர் உடையில் கண்களை மூடி தியானம் செய்வது போல உட்கார்ந்து இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

உபி முதல்வர் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த்.. இதுதான் காரணம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில்