close
Choose your channels

தனுஷ் படம் குறித்து எச்.வினோத் கூறிய மாஸ் தகவல்.. 'சதுரங்க வேட்டை' இரண்டாம் பாகமா?

Saturday, March 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ’துணிவு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் எச். வினோத் இயக்கும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்த நிலையில் அவர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்றும் கமல்ஹாசன் படத்தை இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’சதுரங்க வேட்டை’ போன்ற ஒரு திரைப்படத்தை உங்களிடம் இருந்து எப்போது எதிர்பார்க்கலாம்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ’அதேபோன்ற ஒரு கதையை தனுஷிடம் கூறி இருக்கிறேன் என்றும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே தனுஷ் மற்றும் வினோத் இணையும் திரைப்படம் ’சதுரங்க வேட்டை’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் துணிவு ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கிய எச் வினோத் இருக்கும் அடுத்த படம் தனுஷ் படமா? அல்லது கமல் படமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.