தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,July 19 2019]

தனுஷ் நடித்துள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளதாக ஏற்கனவே நாம் பார்த்தோம். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை ஒய்நாட் புரடொக்சன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கவுள்ள இந்த படத்தில் மேலும் சில நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பிற விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

சந்தோஷ் நாராயணன் இசையில் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் வினோத் ராஜ் குமார் கலை இயக்கத்தில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு அன்பரிவ் சண்டை பயிற்சியில் இந்த படம் உருவாக உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஆடை' ரிலீஸில் திடீர் சிக்கல்: காலை காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிருப்தி

இன்று விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' மற்றும் அமலாபால் நடித்த 'ஆடை' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு முன்பதிவும் செய்யப்பட்டது.

வெளியே முன்ஜாமின், உள்ளே ஜெயில்: மீராமிதுனின் நிலைமை!

பிக்பாஸ் வீட்டின் ஜெயிலில் அடைக்கப்பட்ட மீராமிதுன், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்

சூர்யா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். எதிர்கால சந்ததியினர் கற்கும் புதிய கல்வி கொள்கை குறித்து கேள்விகளை எழுப்பினார்.

மீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன், மிகச்சரியாக ஒவ்வொருவரையும் திட்டமிட்டு அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்க நரித்தனமான வேலைகளை செய்து வருகிறார்.

தமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, அஞ்சலி உள்பட பலர் திகில் படங்களில் நடித்து வரும் நிலையில் தமன்னா