ஜிவி பிரகாஷ் - தனுஷ் கூட்டணியில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

கோலிவுட் திரையுலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி கொண்டு வருகிறது என்பதும், இது குறித்து ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே தெரிவித்தார் என்பதும் தெரிந்ததே.

ஜிவி பிரகாஷ் மற்றும் கனடா நாட்டின் பாடகி ஜூலியா கர்தா இணைந்து உருவாக்கிய ’கோல்ட் நைட்ஸ்’ என்ற ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் இந்த ஆல்பத்தை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளதாகவும் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த ஆல்பத்தை தனுஷூடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் வெளியிடவுள்ளதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். எனவே வரும் 17ஆம் தேதி தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் ஜிவி பிரகாஷின் ’கோல்ட் நைட்ஸ்’ என்ற ஆங்கில ஆல்பத்தை வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சுஷாந்த் உயிருடன் இருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்: தனுஷ் நாயகியின் அதிர்ச்சி டுவீட்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தற்போது போதைப்பொருள் வழக்காக மாறி வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தி தெரியாது போடா' டீசர்ட்: ஆர்டர் கொடுத்தது கனிமொழி, உற்பத்தி செய்து கொடுத்தது திமுக நிர்வாகி!

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டான 'இந்தி தெரியாது போடா' மற்றும் 'ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்' ஆகிய வாசகங்களை கொண்ட டீசர்ட்களை திரையுலக பிரபலங்கள் அணிந்தது

நீங்கள் தேர்வு செய்த வழி சரியானது: பிசி ஸ்ரீராமுக்கு கங்கனா பதிலடி!

பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார். சுஷாந்த் தற்கொலை உள்பட அவர் கூறிய சில கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

இதைவிட நடிகைகளின் கைது செய்தி முக்கியமா? அன்புமணி ஆதங்கம்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவரின் செய்தியை விட நடிகைகளின் கைது செய்தி முக்கியமா? என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கத்துடன்

3 மாதமா விவசாயமே பார்க்கல… ரூ.3.71 கோடி மின்கட்டணம்!!! அதிர்ச்சி தகவல்!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் உதயப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெமாரம் மனதங்கி எனும் விவசாயிக்கு மின்சார வாரியத்தில் இருந்து ஒரு விவரப்பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கிறது.