தனுஷின் அடுத்த படம்.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!

  • IndiaGlitz, [Wednesday,January 17 2024]

தனுஷ் நடித்து முடித்த ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவரது அடுத்த படம் குறித்து மாஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது

நடிகர் தனுஷ் தற்போது தன்னுடைய 50வது படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார். மேலும் தனுஷ் இயக்கத்தில் அவருடைய சகோதரி மகன் ஹீரோவாக நடித்து வரும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

More News

வெற்றிமாறனின் குறிப்பிட்ட ஜாதி வெறுப்பு வெளிப்படுகிறது: இயக்குனர் பேரரசு விமர்சனம்..!

நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இடம் பெற்றது அடுத்து அந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது ஓடிடி தளத்திலிருந்து

மனைவிக்கு முத்தம் கொடுத்து மாட்டு பொங்கல் கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி: வைரல் புகைப்படங்கள்..!

காமெடி நடிகர்  ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தலைப்பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலை தளத்தில்

செஸ் போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்திய தமிழர்.. சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து..!

செஸ் விளையாட்டு போட்டியில் உலக சாம்பியனை தமிழக வீரர் வீழ்த்தி உள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்

மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சி.. இத்தனை மாதங்கள் ஆகுமா?

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு  அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

விஜய் டிவி ரக்சனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த படம்.. முக்கிய அப்டேட்..!

 விஜய் டிவி ரக்சன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து வந்ததாக தகவல் வெளியானது.