close
Choose your channels

தனுஷ் படம் குறித்த முக்கிய அப்டேட்: செல்வராகவன் டுவீட்

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் உருவாக இருப்பதாகவும் அதில் ஒன்று கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் திரைப்படம் என்றும், இன்னொன்று ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் ‘எஸ்12’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று இரவு 7.10 மணிக்கு வெளியாகும் என்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று வெறித்தனமாக தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ’புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz