தனுஷ் செய்த தாய்மாமாவின் கடமை: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும், ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தவர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தனது குடும்பத்தினருக்கும் அவ்வப்போது நேரம் ஒதுக்கும் தனுஷ், தற்போது தாய் மாமனாக தனது கடமையை செய்துள்ளார். தனுஷின் சகோதரி டாக்டர் கார்த்திகாவின் மகனுக்கு திருப்பதியில் மொட்டை எடுக்கும் விழா நடந்தபோது அதில் தாய்மாமன்களான தனுஷ் மற்றும் செல்வராகவன் கலந்து கொண்டனர். தனுஷ் மடியில் உட்கார்ந்து கார்த்திகாவின் மகனுக்கு மொட்டை எடுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டாக்டர் கார்த்திகா தனது சமூக வலைத்தளத்தில் தனது சகோதரர்களை பெருமையுடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நானும் ரவுடிதான்' நடிகருக்கு நிதியுதவி செய்த விஜய்சேதுபதி!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த நடிகர் லோகேஷ் சமீபத்தில் உடல்நலமின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது கிரிமினல் குற்றம்!!! 

கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது குற்றமாகக் கருதப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா எச்சரிக்கை விடுத்துள்

கோழிகளுக்கு கொரோனா??? வதந்தி பரப்பிய ஒருவர் கைது...

பண்ணை கோழிகளுக்கு கொரோனா பரவியதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியவர் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த சின்னிஜெயந்த்!

கடந்த 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய 'கை கொடுக்கும் கை' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் சின்னிஜெயந்த்,

ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பு நாளை வெளியாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியலில் இறங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர்