close
Choose your channels

தனுஷ்-செல்வராகவன் படத்தின் மாஸ் டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Wednesday, January 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் உருவாக இருப்பதாகவும் அதில் ஒன்று கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் திரைப்படம் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் மாஸ் டைட்டில் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ‘நானே வருவேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு, தனுஷின் மாஸ் ஸ்டில் ஒன்றும் வெளியாகியுள்ளது. தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துள்ள இந்த டைட்டில் மற்றும் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது என்பதும் இந்த படம் யுவன் சங்கர் ராஜா இசையில் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.