close
Choose your channels

சந்தானம் படத்தில் டாக்டர் ஆகும் தனுஷ், சிம்பு நடிகை: வைரல் புகைப்படம்..!

Tuesday, February 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்துள்ள திரைப்படத்தில் தனுஷ், சிம்பு படத்தில் நடித்த நடிகை இணைந்துள்ள நிலையில் அந்த படத்தில் அவர் டாக்டர் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை மேகா ஆகாஷ் இணைந்துள்ளதாகவும் அவர் இந்த படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் பட குழுவினர் அறிவித்துள்ளனர். சிம்பு நடித்த ’வந்தா ராஜாவாக தான் வருவேன்’, தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்பட பல திரைப்படங்களில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேகா ஆகாஷ் இந்த படத்தில் இணைந்துள்ளது குறித்து இயக்குனர் கார்த்திக் கூறியபோது, ‘இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய டாக்டர் கேரக்டருக்கு பல நடிகைகளை பரிசீலனை செய்ததாகவும் தற்போது மேகா ஆகாஷ் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என கருதி அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்டது என்றும் கடந்த 1960 ஆம் ஆண்டில் நடைபெறும் சம்பவம் தான் இந்த படத்தின் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தானம், மேகா ஆகாஷ், எம்எஸ் பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.