close
Choose your channels

தனுஷ் என்னை இப்படித்தான் அழைப்பார்: மாளவிகா மோகனன் தகவல்!

Tuesday, June 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தன்னை எப்படி அழைப்பார் என்பது குறித்து ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நேற்று தளபதி விஜய் பிறந்தநாளை அடுத்து சமூக வலைதளங்களில் மாளவிகா மோகனன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று தான் அழைப்பார் என்று அவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார். மேலும் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று அழைத்தாலும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை ’மாலு’ என்றே அழைப்பார்கள் என்றும் மாளவிகா மோகனன் அந்த கேள்விக்கு மேலும் விளக்கமளித்தார். மாளவிகா மோகனன் கூறிய மால்மோ மற்றும் மாலு பெயர்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தனுசுடன் மாளவிகா மோகனன் தற்போது ’D43’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தனுஷ் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.