தனுஷின் சொகுசு கார் நுழைவு வழக்கு: சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதி

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

தளபதி விஜய்யின் சொகுசு கார் வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தனுஷின் சொகுசு கார் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷன் வழக்கறிஞர் மனுவை திரும்பப் பெறுவதாகவும் வரும் திங்கட்கிழமைக்குள் நுழைவு வரியை கட்ட தயார் என்றும் எனவே மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறினார்

மனுவை திரும்ப பெற அனுமதிக்க முடியாது என கூறிய நீதிபதி, தனுஷ் தனது மனுவில் ஏன் தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தார் என்பதற்கான காரணத்தை கூற வேண்டும் என்றும் தெரிவித்தார். சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இன்று மதியம் 2.30 மணிக்குள் தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

பால்காரர் கூட பெட்ரோலுக்கான ஜிஎஸ்டி வரியை கட்டும்போது, உங்களால் முடியவில்லையா? ஜிஎஸ்டி செலுத்த முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். இதனையடுத்து இன்று மதியம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

More News

41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி!

டோக்கியோவில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. வெண்கல பதக்கத்திற்கான

வேலையில்லாத இடியட்: பிரபல நடிகரை விமர்சனம் செய்த வனிதா!

பிரபல நடிகர் ஒருவரை வேலை இல்லாத இடியட் என நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினேகன் மனைவி கன்னிகாவுக்கு கிடைத்த வித்தியாசமான திருமண பரிசு!

பாடலாசிரியர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தின்போது கன்னிகாவுக்கு வித்தியாசமான பரிசு கிடைத்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

வாட்ஸ் அப்-இல் வரும் போட்டோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்: புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ் அப்பில் வரும் புகைப்படங்களை ஒரே ஒருமுறை மட்டுமே பார்க்கும் வசதி புதிதாக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

கரைபுரளும் வெள்ளத்தால் பாலம் அடித்துச் செல்லும் கோரம்… அதிர்ச்சி வீடியோ!

மத்தியப்பிரதேசம் மாநிலம் சிந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள இரண்டு பெரிய பாலங்கள்