டுவிட்டரில் 'அசுரன்' ஆக மாறிய தனுஷ்: சூடு பிடிக்குது என ரசிகர்கள் கமெண்ட்!

  • IndiaGlitz, [Thursday,January 21 2021]

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவரை நடிகர் என்ற தனது பயோவில் குறிப்பிட்டு இருந்த நிலையில் இன்று ’அசுரன்/நடிகர்’ என மாற்றியிருப்பது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தனுஷின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் ’அசுரன்’ மற்றும் நடிகர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை அனைத்து டுவிட்டர் பயனாளிகளும் கவனித்து இது குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

சமீபத்தில் வெளியான சிம்புவின் ’ஈஸ்வரன்’ படத்தில் ’நான் அழிப்பதற்கு வந்த அசுரன் அல்ல காப்பதற்கு வந்த ஈஸ்வரன்’ என்ற வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசுரன்/நடிகர் என தனுஷ் பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்

அதுமட்டுமன்றி இன்று சிம்புவின் டுவிட்டர் கணக்கு வெரிஃபைட் பெற்றுள்ளது. இதனை சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தான் தனுஷ் தனது டுவிட்டரில் இந்த மாற்றாத்தை செய்துள்ளார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தனுஷ் தனது பயோவில் அசுரன் என மாற்றியது தற்செயலா? அல்லது சிம்புவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு செய்தாரா? என்ற விவாதம் தனுஷ்-சிம்பு ரசிகர்களிடையே டுவிட்டரில் நடைபெற்று வருவதால் டுவிட்டர் பெரும் பரபரப்பில் உள்ளது