'காலா' நஷ்டமா? தனுஷ் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,July 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த 'காலா' திரைப்படம் கடந்த மாதம் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நல்ல வசூலை கொடுத்தது. குறிப்பாக சென்னையில் அதிக வசூல் பெற்ற படங்களில் ஐந்தாவது இடத்தை இந்த படம் பெற்றது.

இந்த நிலையில் 'காலா' திரைப்படம் ரூ.40 கோடி நஷ்டத்தை கொடுத்துள்ளதாகவும், இதனையடுத்து விநியோகிஸ்தர்களுக்கு தனுஷ் பணத்தை திருப்பித்தர சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் முன்னணி ஊடகங்கள் உள்பட பல ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 'காலா' படத்தின் வசூல் குறித்து பொய்யான செய்திகள் ஒருசில ஊடகங்களில் பரவி வருகிறது. உண்மையில் 'காலா' வெற்றிப்படம் மட்டுமின்றி எங்கள் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை தந்து கொண்டிருகின்ற படமாகும். இந்த படத்தை தயாரிக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த சூப்பர் ஸ்டார் அவர்களுக்கும், இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் அளித்த பொதுமக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

More News

பிரபல நடிகரின் மகன் திடீர் தலைமறைவு: இன்று நடக்கவிருந்த திருமணம் ரத்து

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மிதுன்சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் திருமணம் இன்று ஊட்டியில் நடக்கவிருந்த நிலையில் திடீரென அவர் தலைமறைவானதால் திருமணம் ரத்து செய்யப்பட்டது

தல தோனி: கூல் கேப்டனுக்கு ஒரு கூலான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உலகின் மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர் என்று அழைக்கப்படுபவரும் தனது ரசிகர்களால் அன்புடன் தல என்று அழைக்கப்படுபவருமான தோனியின் 37வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

தமிழ் இயக்குனரும் பாலியல் தொல்லை கொடுத்தார்: ஸ்ரீரெட்டியின் புதுகுண்டு

ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களால் தெலுங்கு திரையுலகமே அதிர்ந்தது. நடிகர்கள், , தயாரிப்பாளர்கள் பலர் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர்

சமூக அக்கறை வேண்டும்: விஜய்க்கு அமைச்சர் ஜெயகுமார் அறிவுரை

விஜய் நடித்து வரும் 'சர்கார்' பட்த்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளிவந்தது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் வகையில் இருந்ததால் அன்புமணி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியர் உள்பட 15 மாணவர்கள் செய்த கூட்டு பாலியல் பலாத்காரம்:

10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை 15 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என 18 பேர் சேர்ந்து சுமார் 7 மாத காலமாக கூட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது