close
Choose your channels

'சார்பாட்டா பரம்பரை 2'க்கு போட்டியாக 'வடசென்னை 2': டிரெண்டாக்கும் தனுஷ் ரசிகர்கள்..!

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரவு திடீரென இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ’சார்பாட்டா பரம்பரை 2’ படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாகவும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனுசு ரசிகர்கள் ’சார்பாட்டா பரம்பரை 2’ படத்திற்கு போட்டியாக திடீரென ’வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஹேஷ்டேக்கை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர். ஏற்கனவே தனுஷ் சமீபத்தில் நடந்த ’வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘வட சென்னை 2’ திரைப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்றும் ஆனால் எப்போது என்று தான் தெரியவில்லை’ என்றும் கூறியிருந்தார்.

இதேபோல் இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரும் ’வடசென்னை 2’ படம் குறித்து அவ்வப்போது பேட்டி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் ’வடசென்னை 2’ படம் குறித்து டிரெண்டாக்கி வருவதால் இயக்குனர் வெற்றிமாறன் இது குறித்து அறிவிப்பை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’வடசென்னை’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பது இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிப்படமாக உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.