தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்து: மாரி செல்வராஜ்

  • IndiaGlitz, [Monday,September 16 2019]

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஜாதி பாகுபாடு குறித்து பேசிய நிலையில் அடுத்து அவர் இயக்கவுள்ள தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பரியேறும் பெருமாள்' படத்திற்காக மாரி செல்வராஜூக்கு சமீபத்தில் புதுவை அரசு விருது கொடுத்தது. இந்த விருதை பெற்றுக்கொண்ட பின்னர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பரியேறும் பெருமாள் படத்தை பார்த்தபின்னர் தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார். முதல் படம் போலவே இந்த படத்திலும் ஒரு அழுத்தமான சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளேன். இந்த காலத்திற்கு தேவையான முக்கிய கருத்தை தனுஷ் படத்தில் தெரிவிக்கவுள்ளேன்' என்று மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

தனுஷ் - மாரி செல்வராஜ் முதல்முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என்றும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் கேங்க்ஸ்டர் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கவின் - லாஸ்லியா காதலை விட சுபஸ்ரீ மரணம் முக்கியம்: தமிழ் நடிகர் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதல் குறித்தே பலர் விவாதம் செய்து வருகின்றனர். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி, அதில் நடப்பவற்றை பேசுவதைவிட, சுபஸ்ரீ என்ற உயிர் பேனரால் இழக்கப்பட்டுள்ளது

இந்தி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்: வலியுறுத்தும் தமிழ் நடிகை

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'ஒரே நாடு ஒரே மொழி' என இந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஒரு கருத்தை கூறினார்.

வனிதாவை அடுத்து வெளியேறும் இருவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஏழு பேர் மட்டுமே உள்ளனர். இதில் இன்னும் இருவர் வெளியேற்றப்பட்டவுடன் ஐவர் இறுதி போட்டிக்கு செல்வர்

வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்: சுபஸ்ரீ விபத்து குறித்து கமல்!

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்திற்கு பரிதாபமாக பலியான பின்னரே பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் கூறி வருகின்றனர்.

இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் நேற்று வனிதா வெளியேற்றப்பட்டதை அடுத்து தற்போது சேரன், கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின், முகின், லாஸ்லியா ஆகிய 7 பேர் மட்டுமே உள்ளனர்.