புதுமாப்பிள்ளை யோகிபாபுவுக்கு பிரபல நடிகர் அளித்த தங்க செயின்!

  • IndiaGlitz, [Tuesday,February 11 2020]

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் யோகிபாபுவின் குலதெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே.

மேலும் வரும் மார்ச் மாதம் யோகிபாபு-மஞ்சுபார்கவி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அதில் திரையுலகினர், ரசிகர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தனுஷ் நடித்து வரும் ’கர்ணன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின் மீண்டும் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகி பாபுவுக்கு தனுஷ் உள்பட படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி யோகிபாபுவுக்கு திருமண பரிசாக தங்க செயினை அவரது கழுத்தில் தனுஷ் அணிவித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் பிரசாந்த் கிஷோர்-ஜெகந்நாதன் ரெட்டி? பரபரப்பு போஸ்டர்

கற்பனை வளத்துடன் கூடிய போஸ்டர் அடிப்பதில் மதுரை ரசிகர்களை மிஞ்ச யாரும் இல்லை என்பது தெரிந்ததே.

மைனஸ் இரட்டை டிகிரி குளிரில் நடித்த த்ரிஷா! ஒரு ஆச்சரிய தகவல்

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ராங்கி'.

ஆர்யா கூறிய வசனத்தை அப்படியே கூறிய தமிழக முதலமைச்சர்! என்ன ஒரு ஒற்றுமை!

சூர்யா ஆர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கிய 'காப்பான்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

'விஸ்வாசம்' காட்சியை விளம்பரத்திற்கு பயன்படுத்திய தமிழக காவல்துறை!

தல அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான 'விஸ்வாசம்' என்பது அனைவரும் அறிந்ததே

மீண்டும் டெல்லியில் ஆட்சியை அமைக்க உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது.