ரஜினிக்கு வந்த மிரட்டல் கடிதத்திற்கு தனுஷ் அதிரடி பதில்

  • IndiaGlitz, [Monday,May 15 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை மும்பை டான் ஹாஜி மஸ்தான் கதை என்று ஊடகங்களில் செய்திகள் கசிந்தது. இதையறிந்த ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சமீபத்தில் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தனது தந்தையின் கதையில் ரஜினி நடிக்கக்கூடாது என்றும் மீறினால் சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினிக்கு வந்த இந்த மிரட்டல் கடிதத்திற்கு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் அதிகாரபூர்வமாக பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கள் நிறுவனத்தின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க, பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் (Production No :12) படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிக்கைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக திரு. ஹாஜி மஸ்தான் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியானது.

அந்த செய்தியின் அடிப்படையை கொண்டு திரு. ஹாஜி மஸ்தான் அவர்களின் வளர்ப்பு மகன் திரு.சுந்தர் சேகர் மிஸ்ரா அவர்கள் இது சம்பந்தமாக திரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நாங்கள் தயாரித்து வரும் இப்படம் (Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது. குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் திரு.ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.

இது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் திரு பா. இரஞ்சித் அவர்கள், தன்னை தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் இது "ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல" என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது "ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை" என்ற செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதை மும்பை டான் பற்றியது என்பதை நமது IndiaGlitz-ல் ஏற்கனவே செய்தி வெளியானது என்பதும், இந்த செய்தியைத்தான் தனுஷ் தற்போது உறுதி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உலக சாதனை செய்தது எனது முதல் படம். கமல் மகள் பெருமிதம்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த டீசர் வெளியான மூன்று நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று உலக சாதனை செய்துள்ளது...

சென்னையில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் தொடங்கியது

சென்னையில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான 7.4 கிலோ மீட்டர் தூர  சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயணிகள் சேவை இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைத்தனர்...

தமிழக மக்கள் தொகையில் 8ல் ஒன்று. விவேகம் செய்த மகத்தான் சாதனை

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தின் டீசர் கடந்த 11ஆம் தேதி வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய 'கபாலி' சாதனை உள்பட பல சாதனைகளை பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும், லைக்ஸ்களிலும் உடைத்தெறிந்தது...

பாடகி சுசிலீக்ஸ் விவகாரம்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

விஷாலின் 'இரும்புத்திரை' வில்லனாக சர்வதேச பிரபலம்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது விஷால் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.