close
Choose your channels

இந்த புகைப்படத்தில் தனுஷ் பட நாயகி இருக்கின்றார்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

Sunday, June 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக சில நடிகைகள் தங்களுடைய பள்ளிகால புகைப்படங்களை பதிவு செய்து அசத்தி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையும், பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகானின் மகளுமான சாரா அலிகான் தனது பள்ளிகால புகைப்படம் ஒன்றை பதிவு செய்து உள்ளார். இதில் அவர் தன்னுடன் படிக்கும் சக மாணவ மாணவிகளுடனும் ஆசிரியர்களுடனும் உள்ளார். இந்த புகைப்படத்தில் நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டு பிடியுங்கள் என்று சாரா அலி கான் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் சாரா அலிகானை சரியாக கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை சாரா அலி கான் தற்போது தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகிவரும் ’அட்ராங்கி ரே’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.