தனுஷின் 56வது படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் நடிக்கும் 55வது திரைப்படத்தை ’அமரன்’ இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குவார் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் 56வது திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ’குபேரா’ மற்றும் அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள ’இட்லி கடை’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. அது மட்டும் இன்றி, இந்தியில் உருவாகி வரும் ‘Tere Ishk Mein’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான், தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தனது 56வது படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை பெரும் பொருட்செலவில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’பைசன்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படத்தை முடித்தவுடன் ‘கார்த்தி 28’ படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த இரண்டு படங்களையும் முடித்த பின் அவர் தனுஷ் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#D56 Roots begin a Great War
— Dhanush (@dhanushkraja) April 9, 2025
A @mari_selvaraj film pic.twitter.com/3yfhd6B2pZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments