தனுஷின் 'அசுரன்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,August 08 2019]

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.

'அசுரன்' திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்' அக்டோபர் 4ஆம் தேதி வெள்ளியன்று இந்த படம் வெளியாகும் நிலையில் அதற்கு அடுத்த நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் ஆயுத பூஜை, விஜய தசமி என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கொண்ட ஒரு நீண்ட விடுமுறையில் இந்த படம் ரிலீசாவது இந்த படத்திற்கு ஒரு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் அசுரன்' படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷுக்கு திருப்புமுனையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.