முடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ என்ற திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படமும் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என்று கூறப்பட்டாலும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் தனுஷ் கடந்த சில வாரங்களாக பாலிவுட்டில் தயாராகி வரும் ’அத்ராங்கே’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளதாக தனுஷ் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தின் கெட்டப் உடன் கூடிய புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்தக் டுவிட்டும் தனுஷின் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ’அத்ராங்கே’ படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பார் என்றும், அதனை அடுத்து செல்வராகவன் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் ராட்சசன் ராம்குமார் இயக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே.