மெகா இசை வெளியீடு.. பான் - இந்தியா புரமோஷன்.. 'கேப்டன் மில்லர்' படக்குழுவின் மாஸ் பிளான்..!

  • IndiaGlitz, [Tuesday,November 07 2023]

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த பின்னர் மெகா புரமோஷன் திட்டங்களை படக்குழுவினர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை இதுவரை இல்லாத அளவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனேகமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா முழுவதும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி டீசர், டிரைலர் உள்பட ’கேப்டன் மில்லன்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரத் தொடங்கும் என்றும் இந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்த அடிமைத்தனம் அதன் பிறகும் அடிமைத்தனம் தொடர்வது குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், பிரியங்கா, சிவராஜ்குமார், சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படம் தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல் இப்படி சொல்லி கடந்து போயிருக்கலாம்: பிரதீப் விவகாரம் குறித்து முன்னாள் டைட்டில் வின்னர்..!

 பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

தொடரும் மாயாவின் அடாவடி கேப்டன்சி.. ஃபார்ம் ஆகியது விசித்ரா குரூப்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டு மூன்று நாட்கள் ஆனாலும் இன்னும் அவரைப் பற்றி தான் பேச்சு நடைபெற்று வருகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் இல்லாத குறையை

ஐஷுவிடம் எல்லை மீறும் நிக்சன்.. இதெல்லாம் 'வுமன் சேஃப்டியில் வராதா?

பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தான் மாயா மற்றும் பூர்ணிமா குரூப் அவரை சதி செய்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டதாக குற்றஞ்சாப்பட்டுகிறது.

'பால் மேட்டர்': பிரதீப் சொன்னது இதுதான்.. பூர்ணிமாவுக்கு ஒரு குறும்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பால் மேட்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பூர்ணிமாவிடம் அது குறித்து  பிரதீப் விளக்கம் அளித்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில்

நிக்சனிடம் பிராவை எடுத்து கொடுத்த மாயா.. வச்சு செய்யும் அர்ச்சனா..!

மாயா மற்றும் பூர்ணிமா நிக்சனிடம் செய்த செயலை அர்ச்சனா அவரிடம் எடுத்து கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.