டைட்டில் வைக்கும் முன்னரே வியாபாரம் ஆகிவிட்ட தனுஷ் படம்

  • IndiaGlitz, [Monday,February 17 2020]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய தனுஷின் 40வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லூக் போஸ்டர் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் அதற்குள் தொடங்கிவிட்டது

முதல்கட்டமாக இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை டிரைடன்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிரைடண்ட்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’அசுரன்’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைத்து தரப்பினருக்கும் லாபத்தைக் கொடுத்த நிலையில் தற்போது அவரது அடுத்த திரைப்படம் டைட்டில் வைக்க முன்னரே வியாபாரம் தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

14 ஆண்டுகள் சிறை.. விடுதலையாகி, எம்.பி.பி.எஸ் படித்து டாக்டரான இளைஞர்..!

சிறு வயது முதலே அவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்த லட்சித்தை சிறைக் கம்பிகளால் தகர்க்க முடியவில்லை. . 

அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா? அவரே அளித்த விளக்கம்!

நடிகை அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய் விவாகரத்து கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த நிலையில் இந்த விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்று ஏற்கனவே திரையுலகில் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

கால்மேல் கால், கையில் ரத்தம்: 'டாக்டர்' படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக்

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'டாக்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக்

விபத்தில் மறைந்த ரசிகரின் குடும்பத்திற்கு தளபதி செய்த மகத்தான உதவி!

தங்கள் படங்களின் புரமோஷனுக்கு மட்டும் ரசிகர்களை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு இரசிகர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் நடிகர்கள் மத்தியில் தளபதி விஜய் மட்டுமே ரசிகர்களின்

மாஸ்டருக்கு பின் விஜய்சேதுபதியிடம் ஏற்படும் மாற்றம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருவது தெரிந்ததே. இந்த படத்தில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட