close
Choose your channels

தனுஷின் 'D43' குறித்த சூப்பர் அப்டேட்: சத்யஜோதி பிலிம்ஸ் அறிவிப்பு

Friday, June 25, 2021 • தமிழ் Comments

தனுஷ் நடித்துவரும் ‘D43' என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் அந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்து உள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

தனுஷ் தற்போது ’தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார் என்பதும், அவர் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை திரும்பியவுடன் தனுஷ் ஏற்கனவே நடித்து வரும் ‘D43' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் ‘D43' படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘D43' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்றும் இந்த படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பு ஆக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. எனவே தனுஷ் சென்னை திரும்பியதும் ‘D43' படப்பிடிப்பு தொடங்கி ஒரே ஷெட்யூலில் முடிந்து விடும் என்பதும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் தெரிய வருகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகன், சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz