'தனுஷ் 50' படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Tuesday,February 21 2023]

தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதோடு சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை அமைக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’லால் சலாம்’ படத்திற்கும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தான் என்பதும், இந்த பட்த்திலும் விஷ்ணு விஷால் தான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

5 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்.. பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்..!

ஐந்து வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஞ்சள் சேலையில் மயக்கும் கிளாமர்.. ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ஸ்ரேயா சரண் மஞ்சள் சேலை காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷுட்  புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது 

என் மனைவி வேலைக்கு சென்றதால் தான் சினிமாவில் ஜெயித்தேன்: லோகேஷ் கனகராஜ்

 என் மனைவி வேலைக்கு சென்று குடும்பத்தில் சப்போர்ட்டாக இருந்ததால் தான் என்னால் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது என்று பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட 'பார்டர்' ரிலீஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவான 'பார்டர்' என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

சிபிராஜின் 2ஆம் பாக திரைப்படம்.. பான் இந்தியா படமாக்க திட்டம்..!

 சிபிராஜ் நடித்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்