கோடான கோடி நன்றி: முன்னாள் மனைவி ஐஸ்வர்யா படம் குறித்து தனுஷின் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,December 03 2023]

முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’3’. இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படத்தின் மூலம்தான் அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ஒய் திஸ் கொலைவெறி’ உள்பட இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த நிலையில் ’3’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு புது படங்களுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது பார்த்த தனுஷ் ஆனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார்.

’3 படத்தின் ரீ-ரிலீஸுக்கு கிடைக்கும் வரவேற்பு எமோஷனலாக உள்ளது. இந்த ஏகோபித்த வரவேற்புக்கு கோடான கோடி நன்றி’ என்று அவர் பதிவு செய்துள்ளார். தனுஷின் இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

இந்த படம் வெளியாகும் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகளாக இருந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மழைக்காலத்தில் கஷ்டப்படும் தூய்மை பணியாளர்கள்.. விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி..!

மழைக்காலத்தில் தூய்மை பணியாளர்கள் கஷ்டப்படுவதை கண்டு விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ரெயின்கோட் உள்ளிட்ட பொருட்களை அளித்து உதவி செய்துள்ளனர்.

சிம்பு, தனுஷின் 50வது படங்களில் உள்ள அபூர்வ ஒற்றுமை..!

 எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போல் 100வது படம் என்பது தற்போதைய மாஸ் நடிகர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே மாஸ் நடிகர்கள் நடித்து வருவதால் 100வது

மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னையில் நாளை திரையரங்குகள் மூடப்படுகிறதா?

மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை சென்னையில் உள்ள திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கானா தேர்தல்: அனைத்து தொகுதியிலும் பவன் கல்யாண் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!

ஐந்து மாநில தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் நான்கு மாநிலத்தில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

3 வயதிலேயே அம்மாவுக்கு உதவி செய்யும் ஸ்ரேயா மகள்.. க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை ஸ்ரேயா சரணின் மூன்று வயது மகள் அவருடைய போட்டோஷூட்டுக்கு  உதவி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.