close
Choose your channels

தனுஷின் அடுத்த பட ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Saturday, November 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி பலமுரை ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் திடீரென கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்ததால் தனுஷ் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் உறுதியான, இறுதியான ரிலீஸ் தேதி நவம்பர் 15 என இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் இந்த இறுதியான, உறுதியான ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டு, தற்போது புதிய ரிலீஸ் தேதியாக நவம்பர் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இந்த படத்தை வெளியிடும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் இந்த தேதியில் கண்டிப்பாக படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை' உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.