தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய அப்டேட்!

  • IndiaGlitz, [Saturday,August 24 2019]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது இடைவெளி விட்டு நடந்தாலும் கடந்த ஆண்டே இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது

ஆனால் பொருளாதார பிரச்சனை காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கியிருந்ததால் தனுஷும், அவரது ரசிகர்களும் இந்த படத்தை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியை எடுத்த இயக்குனர் கவுதம் மேனன் அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றார். தற்போது இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகவிருப்படதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று மதியம் 3.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அனேகமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இந்த அப்டேட்டில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை' உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிரசவம் பார்த்த டாக்டருக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணி, சிவாஜி பேரன் சிவகுமாரை கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானார்

ஷெரினிடம் வேலை செய்யாத வனிதாவின் வத்திக்குச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்கள் வனிதாவை வெளியேற்றிய பின்னரும், மீண்டும் வனிதாவை பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாளராக அனுமதித்துள்ளது

நமக்கு அமேசானில் ஆர்டர் போட மட்டும்தான் தெரியும்: விவேக்

அமேசான் காடுகள் தீயால் கடந்த சில நாட்களாக எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தீ விபத்து குறித்து உலக நாடுகளின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த கவலையை தெரிவித்து வருகின்றனர்.

மூளையில் பிரச்சனை: மூன்றாவது டெஸ்ட்டில் இருந்து விலகிய ஸ்மித்!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆசஷ் தொடர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற வார்த்தையை தூக்கி எறியுங்கள்: பா.ரஞ்சித்

இந்தியாவில் பலவிதமான மதங்கள், மொழிகள் இருந்தாலும் இந்தியா என்று வரும்போது அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத்தான் நமது முன்னோர்கள் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று கூறி வந்தனர்.