close
Choose your channels

நான்கு மாதங்களில் மூன்று தனுஷ் படங்கள் ரிலீஸ்!

Saturday, August 24, 2019 • தமிழ் Comments

தனுஷ் நடித்த 'பக்கிரி' திரைப்படம் மட்டும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இன்னும் மீதமிருக்கும் நான்கு மாதங்களில் மூன்று தனுஷ் படங்கள் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

முதல்கட்டமாக தனுஷின் நீண்ட நாள் தாமத படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மேலும் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படம் 'பட்டாஸ்'. துரை செந்தில்குமார் இயக்கத்தில் சினேகா நாயகியாக நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு தனுஷ் ரசிகர்களுக்கு தொடர் விருந்து கிடைக்கவிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz