close
Choose your channels

சென்சாருக்கு செல்லும் தனுஷ் படம்

Thursday, February 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று முதல் விருதுநகரில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்து நீண்ட நாள் காலதாமதமான படம் ஒன்று தற்போது சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி இடையிடையே இடைவெளி விட்டு ஒருவழியாக கடந்த ஆண்டு படப்பிடிப்பு முடிவடைந்தது இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் பி.மதன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட நாள் காத்திருப்புக்கு பயனாக ஒரு அருமையான படம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான 'மறுவார்த்தை' பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.