அஜித்துடன் போட்டி இல்லை.. 6 மாதங்கள் தள்ளி போன தனுஷின் 'இட்லி கடை'..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த 'குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே தேதியில் தான் தனுஷ் நடித்து இயக்கிய 'இட்லி கடை' திரைப்படமும் வெளியாகும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'இட்லி கடை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருப்பதாகவும், எனவே ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், ஒரு நல்ல ரிலீஸ் தேதியை தேர்வு செய்து வருகிறோம் என்றும் கூறினார்.
இதனை அடுத்து, அஜித்தின் 'குட் பேட் அக்லி’ திரைப்படத்துடன் 'இட்லி கடை' ரிலீஸ் ஆகும் வாய்ப்பு இல்லை என்றும், படம் ஒரு சில வாரங்கள் தள்ளிப் போகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் 'இட்லி கடை' திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
ஒரு சில வாரங்கள் மட்டுமே தள்ளிப் போகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது படம் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் தள்ளிப் போயுள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரு நல்ல திரைப்படத்தை காண ஆறு மாதங்கள் தாராளமாக காத்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், தனுஷ் நடித்த 'குபேரா' திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 'இட்லி கடை'க்கு முன்பே 'குபேரா' வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Idli kadai #oct1 pic.twitter.com/9EkllemSPt
— Dhanush (@dhanushkraja) April 4, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments