'குபேரா' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்.. ரசிகர்கள் குஷி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் நடித்த 'குபேரா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், இந்த படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்தது.
இதனை அடுத்து, இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சற்று முன் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் நாளை மாலை வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
Trance Of Kuberaa என்ற பாடல், நாளை மாலை 4:05 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தனுஷ் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், ரிலீசுக்கு முன்பே டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை ரூ.50 கோடிக்கு விற்பனையானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில், நாகார்ஜுனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#TranceOfKuberaa TOM#Kuberaa @KuberaaTheMovie pic.twitter.com/KG4BT6Yoxu
— Dhanush (@dhanushkraja) May 24, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments